Monday, June 6, 2011

மக்களுக்கு கிடைத்த வெற்றி

இது மக்களுக்கு கிடைத்த வெற்றி! தமிழக அரசியலில் பல விதிகளை ஓடைதுள்ளது!
1.பணம் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம்; பணம் வாங்கினாலும் யாருக்கு ஒட்டு போடுவது என்று நாங்கள் தான் முடிவு பண்ணுவோம். இது வரும் தேர்தலிலும் பணம் கொடுத்து ஒட்டு வாங்கிவிடலாம் என்ற விதி ஒழிந்தது.
2.சட்டசபை தேர்தல் சாதி அடிப்படையில் தான் நடக்கும் என்ற மற்ற்றொரு விதியும் ஒழிக்கப்பட்டது.
3.நாடகம் காட்டியோ, பேசியோ, சினிமாகாரர்களை வைத்து மக்களை கவர்ந்திடலாம் என்ற நம்பிக்கையும் ஒழிந்தது. எ.கா. வடிவேலுவின் பிரசாரத்திற்கு கூடிய மக்கள் ரசிக்கவே வந்தனர்; மயங்கிவிடவில்லை.
4.ஊடகம் நம் கையில் உள்ளது என்று 'Opinion makers' ஆக மாற முயன்றவர்களுக்கு நல்ல சவுக்கடி! இது 'நக்கீரன்' போன்ற விலைபோன பத்திரிகைகளும், 'சன் டி.வி.' போன்ற சுய லாபத்திற்காக செயல்பட்ட ஊடகங்களுக்கு நல்ல பாடம்!
5 . அரசு நினைத்தால் ஒரு நியாமான தேர்தலை நடத்த முடியும் என்று நிரூபித்தது தேர்தல் ஆணையம். ஒரு 'போஸ்டர்' கிடையாது, ஒரு 'கட் அவுட்' கிடையாத தேர்தலை தமிழகம் இந்த முறைதான் பார்த்தது. இது மற்றுமொரு விதிவிலக்கு.
ஆகாமொத்தம், தமிழகம் மாற்றத்திற்கு தன்னை ஆயத்த படித்திகொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளது என்று மட்டும் புரிகிறது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்றுணர்வோம். தர்மம் என்றும் வெல்லும் என்ற நம்பிக்கை ஓடு நமது பயணம் தொடரட்டும்.

No comments:

Post a Comment