Saturday, March 26, 2011

பசுமை விகடன்-க்கு நான் எழுதிய கடிதம்

அன்புள்ள பசுமை விகடன்-க்கு,
தூரன் நம்பி அவர்களின் பி.டி. பருத்தி பற்றிய 'சாட்டை' பதிவை படிக்க நேர்ந்தது. இந்தியாவில் பி.டி. பருத்தியின் நிலைமையை அறிந்து கொள்ள 'google' இல் 'Bt Cotton' என்று தேடினேன். நான் தேடிய 90 % சதவிகிதம் பி.டி. பருத்தி பற்றி மிகவும் நன்றாகவே எழுதியுள்ளன.
குறிப்பாக கீழே உள்ள இரண்டு இணைய தளத்தில் உள்ள 'reports' குறிப்பிடத்தக்கது.
www.ccsindia.org/policy/glob/studies/wp0008.pdf
www.apaari.org (Status of Bt Cotton in India Report-2009)
தூ.ந. கூறுவது போல பி.டி. பருத்தியில் குறை இருப்பின் அது எவ்வாறு இந்திய விவசாயிகளிடம் இவ்வளவு மதிப்பை பெற்றது? இந்திய முழுதும் பி.டி. பருத்தி பயிர் செய்யும் நிலபரப்பளவு ஆண்டு தோறும் அதிகரித்து வருவது இதை உறுதி படுத்துகிறது. ஏதோ ஒரு விதை வியாபாரி கூறுவதி நம்பி தூ.ந. பி.டி. பருத்தி பற்றி கூறுவது சற்று வருத்தத்தை தருகிறது. அதே சமயத்தில், நான் பி.டி. பருத்தியை ஆதரிப்பவன் என்று நீங்கள் எண்ணகூடாது. சற்று 'scientific evidence' உடன் இருப்பின் நன்றாக இருக்கும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.
முன்பு பசுமை விகடன், ஜெட்ரோபா எனும் பயோ-டீசல் தரும் பயிர் பற்றி எழுதியிருந்தீர். அதில் ஜெட்ரோபா பலர் கூறுவது போல விவசாயிக்கு லாபம் தரும் பயிர் அல்ல என்பதையும், அதற்கு பாசன வசதி வேண்டும் என்பதையும் எழுதி பல சந்தேகங்களை தீர்த்தீர். அது போல பி.டி. பருத்தி விவசாயிகளிடம் 'interview' செய்து ஒரு ஆழமான 'investigative report' செய்தால் நன்றாக இருக்கும். அதற்கு மாற்று வழியாக 'Pesticide-free cotton' என்ற முறையில்,  பி.டி. பருத்தி பயன்படுத்தாது, இயற்கை முறையில் புழு-பூச்சி மேலாண்மை செய்வதை பற்றி கேள்விப்பட்டதுண்டு. அதைப்பற்றி எழுதினால் மேலும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இப்படிக்கு
ப.வி. - இன் தீவர ரசிகன்

No comments:

Post a Comment